2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ரணில் தொடர்பான விசாரணையில் CIDயின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

உள்ளூர்September 1, 2025 · 12 months முன்1
ரணில் தொடர்பான விசாரணையில் CIDயின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறை முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் முன்னாள் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னரும் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.. இந்நிலையில் தொடர்ந்தும் விசாரணை செய்யும் முடிவில் மாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.