2026 October 18, Sunday 🌧️ கொழும்பு 31° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

உள்ளூர்February 28, 2026 · 8 months முன்2
தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளானதில், உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் வாகனம் ஒன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பழுதான நிலையில் இருந்துள்ளது.

அந்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் இழுத்து வரப்பட்ட டிப்பர் வாகனம் எதிர்பாராத விதமாக வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது.

டிப்பர் வாகனம் தனது இயந்திரத்தின் மீது ஏறுவதைக் கண்ட உழவு இயந்திர சாரதி, சாமர்த்தியமாக கீழே குதித்துள்ளார்.

இதனால் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பினார். எனினும், இந்த விபத்தினால் உழவு இயந்திரம் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனங்களை இழுத்துச் செல்லும்போது போதிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றது.