2026 October 20, Tuesday ⛅ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

‘கமாண்டோ சலிந்த’ மார்ச் 12 வரை விளக்கமறியலில்!

உள்ளூர்February 27, 2026 · 8 months முன்9
‘கமாண்டோ சலிந்த’ மார்ச் 12 வரை விளக்கமறியலில்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த, பாதாள உலகக் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராகக் கருதப்படும் ‘கமாண்டோ சலிந்த’ என்பவரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைச் சம்பவத்தின் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ‘கமாண்டோ சலிந்த’, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (27) கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகமவின் உத்தியோகபூர்வ அறையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இதற்கமைய, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.