2026 October 18, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதி நாளை அனுராதபுரத்திற்கு விஜயம் …..

உள்ளூர்February 26, 2026 · 8 months முன்16
ஜனாதிபதி நாளை அனுராதபுரத்திற்கு விஜயம் …..

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்களை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களின் கீழ் அபிவிருத்தி செய்வதன் மூலம் முழுமையான உரிமையை வழங்கும் ‘ஹிமிகம’ இலவச மானிய ஆவணங்களை வழங்கும் தேசிய திட்டத்தின் தொடக்க விழா நாளை பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

1935 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் மானியங்களின் கீழ் அபிவிருத்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் முழுமையான உரிமையைப் பெற்ற விவசாயிகளும் பொதுமக்களும் மனிதத் தேவைகள் மற்றும் மேம்பாட்டுத் தேவைகளுக்கு தொடர்புடைய நிலத்தைப் பயன்படுத்துவதிலும், அந்த நிலத்தை ஒரு பொருளாதார அலகாக அபிவிருத்தி செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு நாளை 500 ‘ஹிமிகாம’ இலவச மானியச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட உள்ளன, மேலும் எதிர்காலத்தில் தீவு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.