2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்பு!

உள்ளூர்February 25, 2026 · 8 months முன்4
தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்பு!

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று (25) காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தென் மாகாண பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் 154ஆவது சரத்தின் பிரகாரம், நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக அரச உப குழுவின் பிரதித் தலைவராகச் சேவையாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் கடமையாற்றியுள்ளார்.