2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்

உள்ளூர்February 24, 2026 · 8 months முன்2
கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்தார்.

மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பலம்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர்.

சுவாமி கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

பின்னர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு, ஆலயத்தையும் சுற்றி குறித்த குழுவினர் பார்வையிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.