2026 October 17, Saturday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஹைலெவல் வீதி ரயில் கடவைக்கு தற்காலிக பூட்டு

உள்ளூர்February 24, 2026 · 8 months முன்6
ஹைலெவல் வீதி ரயில் கடவைக்கு தற்காலிக பூட்டு

களனிவெலி ரயில் மார்க்கத்தின் புவக்பிட்டிய மற்றும் அவிசாவளை ஆகிய நிலையங்களுக்கு இடைப்பட்ட கிரிவந்தல ரயில் நிலையத்திற்கு அருகில் ஹைலெவல் வீதி ரயில் கடவையில் திருத்தப் பணிகளை முன்னெடுப்பதற்காக, அது தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

குறித்த வீதியில் திருத்தப் பணிகள் மார்ச் 05ஆம் திகதி முதல் மார்ச் 08ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதன் காரணமாக பின்வருமாறு போக்குவரத்து நடவடிக்கைகள் பகுதியளவிலும் முழுமையாகவும் தடைப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 மார்ச் 05 வியாழக்கிழமை : மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும்.

2026 மார்ச் 06 வெள்ளிக்கிழமை : மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும்.

2026 மார்ச் 07 சனிக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்துடன், மு.ப 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு (30 நிமிடங்கள்) முழுமையாக மூடப்படும்.

2026 மார்ச் 08 ஞாயிற்றுக்கிழமை: மு.ப 8.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்துடன், மு.ப 9.00 மணி முதல் பி.ப 1.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு (30 நிமிடங்கள்) முழுமையாக மூடப்படும்.

இந்தக் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும், சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்கும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.