2026 October 17, Saturday ⛅ கொழும்பு 29° ⛈️ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்

உள்ளூர்February 24, 2026 · 8 months முன்2
இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) தலைவர் ரிச்சர்ட் தாம்சன் (Richard Thompson), இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.

டுபாயிலிருந்து வருகை தந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று காலை 08:35 மணிக்கு வந்தடைந்தார்.

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) அதிகாரிகள் குழுவினர் வரவேற்றனர்.

இவரது இந்த வருகையானது இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர் மற்றும் 2026 ஐசிசி ஆண்கள் இருபதுக்கு -20 உலகக்கிண்ணத் தொடர் (இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. அத்துடன், விளையாட்டின் ஊடாக இலங்கையின் சுற்றுலாவை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.