2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ☀️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

3900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு!

உள்ளூர்February 22, 2026 · 8 months முன்1
3900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு!

3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3900 மற்றும் 3700 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் முறையே எதிர்வரும் 24 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன.

எவ்வாறாயினும், இன்றைய தினமும் (22) நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன், சில இடங்களில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

தற்போதைய நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், போதுமான கையிருப்பை பேணுவதற்காக புதிய கட்டளைகள் (orders) வழங்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரி மாத இறுதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் அதிகளவிலான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், எரிவாயு விநியோகிக்கப்படும் சரியான திகதி குறித்து லிட்ரோ நிறுவனம் தமக்கு இதுவரை அறிவிக்கவில்லை என வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.