2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

BIMSTEC நிபுணத்துவ குழுவின் ஆரம்ப மாநாடு இலங்கையில்

உள்ளூர்February 17, 2026 · 6 months முன்2
BIMSTEC நிபுணத்துவ குழுவின் ஆரம்ப மாநாடு இலங்கையில்

7வது இந்திய சமுத்திர மாநாட்டிற்கு இணைவாக 2024ம் ஆண்டு இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அரச நிதி மற்றும் நிதி கொள்கை தயாரிப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் நிபுணத்துவ அறிவு உட்பட அனுபவங்களை உறுப்பு நாடுகளுக்கிடையில் பகிர்வதற்கு வசதிகளை திட்டமிடும் வகையில் அரச நிதி மற்றும் நிதி கொள்கை தொடர்பில் நிபுணத்துவ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு வெளிவிவகார அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எண்ணக்கருவிற்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்களின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த நிபுணத்துவ செயற்பாட்டு திட்டங்களை தயாரிக்கும் வகையில் நிபுணத்துவ குழுவின் ஆரம்ப கூட்டத்தை இலங்கையில் நடத்துவது குறித்து ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சு ஊடாக பிம்ஸ்டெக் அலுவலகம் இலங்கையிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இதற்கமைய குறித்த நிபுணத்துவ குழுவின் 2026ம் ஆண்டுக்கான கூட்டத்தை இலங்கையில் நடத்தும் வகையில் நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.