2026 October 19, Monday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சாதாரண தர மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

உள்ளூர்February 16, 2026 · 8 months முன்4
சாதாரண தர மாணவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்பாராத காலநிலை மாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏற்படும் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசேட கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), முப்படையினர் மற்றும் காவல்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பரீட்சை காலப்பகுதியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கனவே அந்தந்த துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அனர்த்தங்களினால் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதில் சிக்கல் ஏற்பட்டால், அதனைத் தீர்க்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் விசேட அவசர செயல்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்கள் அல்லது பெற்றோர்கள் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொண்டால் பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்: 117

பரீட்சைத் திணைக்களம்: 1911

தேசிய பரீட்சை அவசர செயல்பாட்டு பிரிவு: 0113 668 010

0113 668 013

0113 668 020

0113 668 100

பரீட்சை காலப்பகுதியில் காலநிலை பாதிப்புகளைத் தவிர்ப்பது தொடர்பான முழுமையான வழிகாட்டி ஆவணத்தை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் (www.dmc.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.