2026 October 21, Wednesday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 28° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புத்தளம் ரயில் பாதை நாளை திறப்பு!

உள்ளூர்February 15, 2026 · 8 months முன்5
புத்தளம் ரயில் பாதை நாளை திறப்பு!

புத்தளம் ரயில் பாதையிலான ரயில் சேவைகள், நாளை (16) முதல் புத்தளம் ரயில் நிலையம் வரை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தப் பாதையிலான பயணிகள் ரயில் சேவைகள், பல கட்டங்களின் கீழ் நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தாண்டிய, குடாவெவ ஆகிய ரயில் நிலையங்கள் வரை நீடிக்கப்பட்டிருந்தன.

இறுதியாக டிசம்பர் 29ஆம் திகதி சிலாபம் ரயில் நிலையம் வரை சேவைகள் நீடிக்கப்பட்டன.

சிலாபம் மற்றும் புத்தளம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள பத்துளுஓயா பாலத்திற்கு அருகில் ரயில் பாதை நீரில் அடித்துச் செல்லப்பட்டமை, தில்லடிய உப ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டமை, மானுவன்கம உப ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பல இடங்களில் தெதுரு ஓயாவினால் ரயில் பாதைக்குக் கீழ் பகுதி அரிப்புக்குள்ளானமை போன்ற பாரிய அனர்த்தங்கள் காரணமாகவே புத்தளம் வரையான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.