2026 October 26, Monday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 25° 🌧️ கண்டி 21° 🌧️ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

உள்ளூர்February 12, 2026 · 9 months முன்4
இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புத்த சாசன சபையின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றதாகவும், அதிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

மே மாதம் 01 ஆம் திகதி ‘விசா’ நட்சத்திரம் இல்லாத காரணத்தினால், அந்தத் தினத்தை வெசாக் போயா தினமாக அறிவிப்பது உகந்ததல்ல எனத் திரைனிக்காய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய மே 30ஆம் திகதி வெசாக் தினமாகத் தீர்மானிக்கப்பட்டதாக, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.