2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்தது – இலங்கையில் மழை தொடரும்!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரை கடூழியச் சிறை!இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு

பத்மே உள்ளிட்ட ஐவர் இன்று இலங்கைக்கு

உள்ளூர்August 30, 2025 · 1 year முன்3
பத்மே உள்ளிட்ட ஐவர் இன்று இலங்கைக்கு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.