2026 November 1, Sunday 🌧️ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மின்சார சபை தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

உள்ளூர்February 10, 2026 · 9 months முன்1
மின்சார சபை தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது, இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மின்சார சபையின் 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 8 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களினால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கப்பெறாத நிலையில், மீண்டும் அக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரி நேற்றைய தினம் (09) அமைச்சருக்கு மற்றுமொரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், அவற்றை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர ஊழியர்களுக்கு வேறு வழியில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, கோரிக்கைகளை நிறைவேற்றாது இலங்கை மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்குப் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.