2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சிறுவர் துஷ்பிரயோகம்: மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவை!

உள்ளூர்February 9, 2026 · 9 months முன்4
சிறுவர் துஷ்பிரயோகம்: மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவை!

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது 4,000க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1998ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த தண்டனைச் சட்டக்கோவையின் படி, நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், சிறுவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், பாலியல் தொழிலுக்காகச் சிறுவர்களை வாடகைக்கு எடுத்தல் அல்லது பணியில் அமர்த்துதல், சிறுவர்கள் மீதான கொடூரம், பாலியல் வல்லுறவு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றங்களில் இந்த அதிவேகக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.