2026 November 4, Wednesday ☀️ கொழும்பு 27° 🌧️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்கான திட்டம் ஆரம்பம்

உள்ளூர்February 8, 2026 · 9 months முன்4
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடுவதற்கான திட்டம்  ஆரம்பம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்காக கேள்வி மனுக்கள் கோரப்பட்ட பின்னர் நிறுவனமொன்றுக்கு அது வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நிறுவனம் அது தொடர்பான பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெரவில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்துடன் இணைந்து வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.