2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வொஷிங்டன் போஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி பதவி விலகல்!

உலகம்February 8, 2026 · 6 months முன்1
வொஷிங்டன் போஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி பதவி விலகல்!

அமெரிக்காவின் முன்னணி நாளிதழான வொஷிங்டன் போஸ்ட்டில் பணியாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டதன் எதிரொலியாக தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக தனது விளையாட்டு, புத்தக விமர்சனப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கு அதாவது 300க்கும் மேற்பட்ட பணியாளர்களை கடந்த வியாழக்கிழமை திடீரென பணிநீக்கம் செய்தது. மேலும், ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பல இடங்களில் தனது கிளைகளையும் மூடியது.

இந்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வாஷிங்டன் போஸ்ட் தலைமைச் செயல் அதிகாரி வில் லூயிஸும் தனது பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.