2026 August 18, Tuesday ⛅ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

ருமித்ர பியசிறி இலங்கையை வந்தடைந்தார்

உள்ளூர்February 8, 2026 · 6 months முன்0
ருமித்ர பியசிறி இலங்கையை வந்தடைந்தார்

இந்தியா – 2026இல் நடைபெற்ற 12வது இளம் சமையல் கலைஞர் ஒலிம்பியாட் (Young Chef Olympiad) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற மாணவர் ருமித்ர பியசிறி, இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

உலகின் மிகப்பெரிய சர்வதேச சமையல் கலைப் போட்டியான இதனை, இந்திய சர்வதேச ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனமும் (IIHM) லண்டன் சர்வதேச விருந்தோம்பல் சபையும் (IHC) இணைந்து நடத்தின.

பிப்ரவரி 01 முதல் 06 வரை இந்தியாவின் கல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் 50 நாடுகளைச் சேர்ந்த இளம் சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர்.

ருமித்ர பியசிறிக்கு வழிகாட்டியாகச் சென்றிருந்த விரிவுரையாளர் இமேஷிகா டி சில்வா மற்றும் ருமித்ர ஆகியோர், புதுடில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானமான AI-277 மூலம் இன்று காலை 06.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்பதற்காக ளுடுஐஐவு நிறுவனத்துடன் இணைந்த கொழும்பு விருந்தோம்பல் முகாமைத்துவ அகடமியின் (CAHM) முதல்வர், நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள் மற்றும் ருமித்ர பியசிறியின் பெற்றோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.