2026 October 10, Saturday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!

உள்ளூர்August 18, 2026 · 2 months முன்7
20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) புதிய தலைவராக சுரன்ஜித் வேவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி செயலணியின் உறுப்பினராகவும் செயற்படும் இவர், வங்கியியல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் 20 வருடங்களுக்கும் மேலான சேவை அனுபவத்தைக் கொண்டவராவார். 

இவர் 2013 ஆம் ஆண்டில் மத்திய மாகாணத்தின் சிறந்த பால் சார்ந்த உப-தயாரிப்பு தொழில்முனைவோராகவும் மதிப்பீடு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 

கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவரான சுரன்ஜித் வேவிட்ட, உரிமம் பெற்ற சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர் உட்பட பல துறைகளில் அனுபவம் வாய்ந்த ஒருவராவார். 

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகப் பணியாற்றிய புத்திக ஹேவாவசம் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை காரணங்களினால் நேற்று (17) தனது பதவியை இராஜினாமா செய்ததால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அவர் தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலா, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரிடம் எழுத்து மூலம் சமர்ப்பித்திருந்தார்.