2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

விளையாட்டுFebruary 7, 2026 · 6 months முன்3
முதலாவது போட்டியில் போராடி வென்ற பாகிஸ்தான்

10-வது ஐசிசி ஆடவர் T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

நெதர்லாந்து அணியுடன் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணித்தலைவர் Scott Edwards அதிகபட்சமாக 37 ஓட்டங்களையும், Bas de Leede 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.