2026 November 7, Saturday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 24° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

2025 க.பொ.த சா.த பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

உள்ளூர்February 6, 2026 · 9 months முன்8
2025 க.பொ.த சா.த பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவு பெறும் வரை குறித்த பரீட்சைகள் சம்பந்தமான வகுப்புகள் தடை செய்யப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை குறித்த பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அமைவாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நடவடிக்கைகளும் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.