2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ☀️ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

முஸ்லீம் விவாகம் விவாகரத்து சட்டமூல சீர்திருத்தங்கள் சமர்ப்பிப்பு

உள்ளூர்February 5, 2026 · 6 months முன்0
முஸ்லீம் விவாகம் விவாகரத்து சட்டமூல சீர்திருத்தங்கள் சமர்ப்பிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா PC இலங்கையின் தனிநபர் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை இன்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். இந்த சீர்திருத்தங்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என குறித்த மசோதாவில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய முன்மொழிவுகள்:

  1. திருமண முறிவு: ஒரு திருமண உறவை மீட்டெடுக்க முடியாத நிலையை (Irretrievable breakdown) விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அறிமுகப்படுத்துதல் மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெறுவதற்கான நடைமுறையை உருவாக்குதல்.

  2. முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தம்: திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல், திருமணப் பதிவேட்டில் மணமகளின் கையொப்பத்தை கட்டாயமாக்கல், தகுதியுள்ள பெண்கள் காதிகளாகப் பணியாற்றுவதற்கான தடையை நீக்கல் மற்றும் காதிகள் அனைவரும் சட்டத்தரணிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தங்கள் சட்டத்தின் முன் சமத்துவத்தை நிலைநாட்டும் ஒரு காலோசிதமான தலையீடு என பைஸர் முஸ்தபா PC சுட்டிக்காட்டியுள்ளார்.