2026 November 7, Saturday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர்

உலகம்February 4, 2026 · 9 months முன்3
இலங்கை சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர்

இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக, இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். 

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து இலங்கை மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இன்றைய தினம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித தெவ்னிமோரி தாதுக்கள் மக்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுவதன் மூலம் இந்த விசேட தினம் மேலும் சிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

புனித தெவ்னிமோரி தாதுக்களை ஏந்திய இந்திய விமானம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையுடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும், புத்த பெருமானின் ‘புனித தெவ்னிமோரி தாதுக்கள் தரிசனம் இன்று கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது.