2026 November 8, Sunday ⛅ கொழும்பு 24° ⛈️ யாழ்ப்பாணம் 25° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை

உள்ளூர்February 4, 2026 · 9 months முன்12
ஜனாதிபதி பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை

78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள 49 கைதிகளுக்கு ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் இந்த விசேடபொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, பின்வரும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் கைதிகளுக்கு இந்த விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வார கால பொதுமன்னிப்பு இதன்கீழ் வழங்கப்படுகிறது.

75,000 ரூபாவிற்கு குறைந்த அபராதத்தைச் செலுத்தத் தவறியமையினால் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலத்தை ரத்துச் செய்தல் இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் இடம்பெறுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.