2026 November 7, Saturday 🌧️ கொழும்பு 25° 🌧️ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தலாய்லாமாவுக்கு கிராமி விருது – சீனா கண்டனம்

உலகம்February 3, 2026 · 9 months முன்6
தலாய்லாமாவுக்கு கிராமி விருது – சீனா கண்டனம்

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68ஆவது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றார். அவரது “Meditations: The Reflections of His Holiness the Dalai Lama” என்ற ஆல்பத்திற்காக, “சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு” பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை சீனாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாக சில தரப்பினர் பயன்படுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார்.

தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல, அவர் மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. மேலும் கலைத்துறை சார்ந்த விருதுகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை சீனா வன்மையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.