2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
BREAKING
டெங்கு மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!வறுமைக்கோடு மீண்டும் உயர்வு – ஜூனில் 17,592 ரூபாவாக பதிவு!நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அவசர சிவப்பு அறிவிப்பு!முன்னாள் IGP வழக்கில் முக்கிய நீதிமன்ற தீர்ப்பு!சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதி.நீர்கொழும்பு சிறையில் உயிரிழப்பு 7 ஆக உயர்வு!முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் கைதுஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றவாளி!

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

உள்ளூர்February 2, 2026 · 6 months முன்1

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின் போதே அவர் குறித்த பிரதேச சபையின் தவிசாளராக தெரிவாகியுள்ளார்.

வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதன்படி, ஒரு மேலதிக வாக்கினால் வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

வெலிகம பிரதேச சபையின் தலைவராகப் பணியாற்றிய லசந்த விக்ரமசேகர கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பிரதேச சபையிலுள்ள அவரது உத்தியோகபூர்வ அறையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அப்பதவி வெற்றிடமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.