2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!

உள்ளூர்February 2, 2026 · 7 months முன்2
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்!

உலக சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கையிலும் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 200 அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 4,889 டொலராகக் காணப்பட்ட ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, இன்று (2) 4,687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

உலக சந்தையின் இந்த வீழ்ச்சிக்கு நிகராக, இலங்கையிலும் ஒரு பவுன் தங்கத்தின் விலை சுமார் 12,000 ரூபாவால் குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி விற்பனை விலைகள் வருமாறு:

24 கரட் தங்கம் (ஒரு பவுன்): ரூ. 368,000 (கடந்த வெள்ளிக்கிழமை 380,000 ரூபாவாக இருந்தது).

22 கரட் தங்கம் (ஒரு பவுன்): ரூ. 338,600.

தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவது நுகர்வோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.