2026 November 4, Wednesday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌫️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

93 கிலோ ஏலக்காய் மீட்பு : நாவலப்பிட்டி நபர் கைது

உள்ளூர்February 2, 2026 · 9 months முன்4
93 கிலோ ஏலக்காய் மீட்பு : நாவலப்பிட்டி நபர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட பெரும் அளவிலான ஏலக்காய் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Terminal), விமான நிலைய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 93 கிலோகிராம் ஏலக்காய் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டிலிருந்து இந்த ஏலக்காய் தொகுதியை மறைத்து எடுத்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட ஏலக்காய் தொகுதியையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.