2026 November 2, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

உள்ளூர்January 31, 2026 · 9 months முன்5
திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்பகுதியில் இது ஏற்பட்டிருந்தாலும், அதற்கு அருகிலுள்ள நிலப்பரப்பில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.