2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு

உள்ளூர்January 30, 2026 · 7 months முன்2
குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு

பி.வி.சி (PVC) குழாயினுள் நுணுக்கமான முறையில் மறைத்து வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை தொடங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடங்கொட, லியனகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சுற்றிவளைப்பின் போது, அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் சோதனையிடப்பட்டார். இதன்போது அவரது பயணப் பையிலிருந்த பி.வி.சி குழாயைச் சோதித்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டன.

சுமார் 45 கிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 65 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் பெறுமதி சுமார் 28 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் சிறிய அளவிலான டிஜிட்டல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன