2026 September 23, Wednesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

30 திகதி போராட்டம் – குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு.

உள்ளூர்August 28, 2025 · 1 year முன்2
30 திகதி போராட்டம் – குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஆதரவு.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தமது முழுமையான அதரவு இருக்கும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் வெற்றிபெற அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு வழங்கவேண்டும். என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

– ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கூடிய ஒரு விடயம். போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்கும். அத்துடன் போராட்டம் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும், நியாயமான போராட்டத்தை பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். என்றும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.