2026 September 22, Tuesday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
இருநாட்டு நலன்களை முன்னேற்ற வலுவான நிகழ்ச்சி நிரல் – எரிக் மேயர்உலக கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு 169வது இடம்!நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு – விமல் வீரவன்ச மீது CCIB விசாரணை!இலஞ்சக் குற்றச்சாட்டில் முன்னாள் மேல் மாகாண சுகாதார அமைச்சர் கைது!ஊழல் மற்றும் ஒழுங்கீனங்களை கட்டுப்படுத்த புதிய கிரிக்கெட் சட்டமூலம்வெளிநாட்டு நிதியளிப்பு அபாயம் குறைந்தது – இலங்கைக்கு தர உயர்வு2027 நிதியாண்டுக்கான முக்கிய சட்டமூலம் வர்த்தமானியில்!மன்னார் முதல் பருத்தித்துறை வரை சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள்!

நாட்டின் பொதுமக்களுக்காக புதிய WhatsApp தொலைபேசி எண் அறிமுகம்.

BREAKINGஉள்ளூர்August 13, 2025 · 1 year முன்0
நாட்டின் பொதுமக்களுக்காக புதிய WhatsApp தொலைபேசி எண் அறிமுகம்.

நாட்டின் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தனியுரிமையை பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சனைகளின் போது நேரடியாக பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை தொடர்புக் கொள்வதற்கான புதிய WhatsApp தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவால் 071-8598888 எனும் புதிய WhatsApp இலக்கத்தை இன்றைய தினத்திலிருந்து (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப் புதிய WhatsApp தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்புவதற்காகவும், வீடியோ மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரம் பயன்படுத்த முடியும் என்பதுடன், தொலைபேசி அழைப்பினை மேற்கொள்வதற்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் இவ் இலக்கத்தினூடாக தங்களின் பிரச்சனைகள் மற்றும் தகவல்கள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.