2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

சிறுவர் தொடர்பான சட்டங்களில் திருத்தம்

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்1
சிறுவர் தொடர்பான சட்டங்களில் திருத்தம்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவும், சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய,

சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்தல்.

சிறுவர் உரிமை சட்டமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான கொள்கைகளை பின்பற்றும் வகையிலான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்.

2005ம் ஆண்டின் 34ம் இலக்க வீட்டு வன்முறை தடுப்பு சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்.

உள்ளிட்ட மேலும் சில சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.