2026 October 23, Friday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 28° ⛈️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழ். போதனாவிற்குள் நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில்

உள்ளூர்January 27, 2026 · 9 months முன்7
யாழ். போதனாவிற்குள் நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் கண்காணிப்பையும் மீறி, அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், சுத்திகரிப்பு பணியாளர்களின் மேற்பார்வையாளரின் கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார்.

அது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் விரைந்து செயற்பட்டு , கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.