2026 October 26, Monday ⛈️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 29°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

உள்ளூர்January 27, 2026 · 9 months முன்4
சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

சுற்றுலா துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோரின் தலைமையில், திருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலா துறை பற்றி உருவாகியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஒரு சிறப்பு கலந்துரையாடல் இன்று (26) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன் போது, சுற்றுலா துறையில் முதலீடு செய்ய முன்வரும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாகாண சுற்றுலா துறை பணியகத்தின் தலைவர் பிரியந்த மலவன்னகொட மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் உட்பட மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட பல நிறுவனத் தலைவர்கள்,உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், சுற்றுலா துறை பிரதி அமைச்சர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் மாகாண சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் தலைவர் பிரியந்த மலவன்னகொட ஆகியோர், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான எல்ஸ்வத்த, இறக்கக்கண்டி, நிலாவெளி, சலப்பையாரு, குச்சவெளி ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களை ஆய்வு செய்யும் கண்காணிப்பு விஜயத்திலும் பங்கேற்றனர்.