2026 October 29, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 9 பேர் காயம்

உள்ளூர்January 26, 2026 · 9 months முன்3
விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 9 பேர் காயம்

அனுராதபுரம் – கண்டி பிரதான வீதியின் மரதன்கடவெல பிரதேசத்தில் ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில், வெளிநாட்டு தம்பதியினர் உட்பட 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி வெளிநாட்டுத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டி, எதிர்த் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

 விபத்தில் வெளிநாட்டு தம்பதியினரும், ஜீப் வண்டியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளனர். 

 அத்துடன் வேனில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்து சிகிச்சைக்காக மரதன்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

 விபத்து தொடர்பில் மரதன்கடவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.