2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு

உலகம்January 25, 2026 · 7 months முன்3
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா மசகு எண்​ணெய் வாங்​கிய​தால் அதன் மீது நாங்​கள் கூடு​தலாக 25 சதவீத வரி விதித்​தோம் எனவும் இது எங்​களுக்கு வெற்​றி எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்​போது ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வது வெகு​வாக குறைந்து விட்​டது எனவும் இதனால் இந்​தியா மீது விதிக்​கப்​பட்ட கூடு​தல் வரியை நீக்க இருதரப்பு பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது எனவும் இதனால் இந்​தியா மீதான கூடு​தல் வரி நீக்​கப்​படலாம் என வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்​யா​விடம் எண்​ணெய் வாங்​கும் நாடு​கள் மீது 500 சதவீத வரி விதிப்​பது தொடர்​பான சட்டமூலம் மீது அமெரிக்க பாராளு​மன்​றத்​தில் ஆலோ​சனை நடை​பெறும் நிலை​யில், இந்​தியா மீதான கூடு​தல் வரி நீக்​கப்​படலாம் என அவர் மேலும் கூறி​யுள்​ளார்​.