2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!

10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்2
10 மோட்டார் சைக்கிள்களுடன் இளைஞர்கள் கைது

மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களில், போலியான இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஓட்டிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு கொழும்பு – மாத்தளை பேருந்து ஒன்றினை செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர்களை மாத்தளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.