2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தொலைந்து சென்ற இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

உலகம்January 18, 2026 · 10 months முன்4
தொலைந்து சென்ற  இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு

11 பேருடன் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். 

 அதன்படி, இந்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

 அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

 இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் நேற்று (17) மாயமானதுடன், காணாமல் போன சமயம் அதில் 11 பேர் இருந்துள்ளனர். 

 இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையிலேயே இந்த விமானம் மாயமாகியிருந்தது.