2026 November 3, Tuesday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஹல்துமுல்லையில் பஸ் விபத்து : சாரதி பலி

உள்ளூர்January 18, 2026 · 10 months முன்6
ஹல்துமுல்லையில் பஸ்  விபத்து : சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது. 

 அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்தின் நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். 

 விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.