2026 August 15, Saturday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகல கொண்டாட்டம்ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் ஷிரான் பாசிக்கிடம் விசாரணை!இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்அடுத்தடுத்து 3 அதிர்வுகள்!பல பகுதிகளில் இன்று மழை,வளிமண்டலவியல்திணைக்கம் அறிவிப்பு!இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் – மத்திய வங்கி கணிப்பு!22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!டெங்கு வேகமாக பரவுகிறதா? நோயாளர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தை தாண்டியது!அமெரிக்க போர்க்கப்பலில் உணவுப் பற்றாக்குறை – ஆயிரக்கணக்கான வீரர்கள் அவதி?

முடிவுக்கு வந்த கெஹலியவின் வழக்கு

உள்ளூர்January 16, 2026 · 7 months முன்0

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. 

இந்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைத் தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். 

இதன்போது, சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. 

அதன்படி, இந்த வழக்கினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதால், வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியது. 

அதற்கமைய, குறித்த வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டது. 

வெகுஜன ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் சிலரின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தது.