2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

ஜோன்ஸ்டனின் வழக்கு ஒத்திவைப்பு!

உள்ளூர்January 14, 2026 · 7 months முன்1
ஜோன்ஸ்டனின் வழக்கு ஒத்திவைப்பு!

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (14) கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் சாகிர் ஆகிய பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவர்கள் இருவரும் வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் வேறு ஒரு வழக்குக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இதன்படி, இந்த வழக்கை மீண்டும் மார்ச் மாதம் 04 மற்றும் 18 ஆம் திகதிகளில் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதவான், அன்றைய தினம் சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தெரிவித்து அழைப்பாணை விடுவிக்குமாறும் கட்டளையிட்டார்.

அன்றைய தினம் பிரதிவாதியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் இருப்பார்களாயின், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.