2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!

கல்வி மறுசீரமைப்பு 2027 ஆண்டிற்கு ஒத்திவைப்பு

உள்ளூர்January 13, 2026 · 7 months முன்0
கல்வி மறுசீரமைப்பு 2027 ஆண்டிற்கு ஒத்திவைப்பு

6ஆம் தர கல்வி மறுசீரமைப்பை மீண்டும் மீளாய்வு செய்து 2027இல் அதனை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய 6ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார்.

அதற்கமைய,

01.மனிதவள மேம்பாடு

02.உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்

0.3மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள்

04.பாடத்திட்ட மேம்பாடு

05.பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.