2026 October 24, Saturday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

உள்ளூர்January 3, 2026 · 10 months முன்3
விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.அச்சுதன் நேற்று (02) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அவர் தனது நியமனக் கடிதத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

நியமனத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவர் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடனான தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள டங்கன் வைட் மண்டபத்தில் நடத்தினார்.

இதன்போது, நாட்டின் விளையாட்டுத் துறையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.