2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

2026 கல்வி ஆண்டு பாடசாலை நேரங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு.

உள்ளூர்January 2, 2026 · 8 months முன்0
2026 கல்வி ஆண்டு பாடசாலை நேரங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு.

​இலங்கையின் கல்வி அமைச்சினால் 2026 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை நேரங்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

​அண்மைக் காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள், பல மாகாணங்களில் பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, 2026 ஆம் கல்வியாண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்க வேண்டாம் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

​இதன்படி, கல்வி மற்றும் போக்குவரத்துத் துறைகள் வழமைக்குத் திரும்பும் வரை, 5 முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை நேரங்கள் மாற்றமின்றி முற்பகல் 7:30 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை தொடரும் என அமைச்சு அறிவித்துள்ளது.

​முக்கியத் திகதிகள் மற்றும் மாற்றங்கள்:

​கல்வியாண்டு ஆரம்பம்: அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும்.

​பாடவேளைகள்: 6 முதல் 13 ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கப்படும் (ஒவ்வொரு பாடவேளையும் 45 நிமிடங்கள்).

​தரம் 1 மற்றும் தரம் 6: 2026 ஆம் ஆண்டில் 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. தரம் 6 க்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 இல் ஆரம்பமாகும். தரம் 1 மாணவர்களை அடையாளம் காணும் பணி ஜனவரி 5 இல் ஆரம்பமாகி, முறையான வகுப்புச் செயல்பாடுகள் ஜனவரி 29 அன்று தொடங்கும்.

​க.பொ.த உயர்தரப் பரீட்சை: 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய அமர்வுகள் 2026 ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நடைபெறும்.

​தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் செயலூட்டப் புத்தகங்கள் அந்தந்த வகுப்புகள் ஆரம்பமாவதற்கு முன்னரே விநியோகிக்கப்படும் எனவும் ஏனைய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.