2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்ட மாட்டோம்!

உள்ளூர்December 31, 2025 · 10 months முன்7
தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்ட மாட்டோம்!

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.

தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்னமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் விகாராதிபதியாக நான் எதற்கும் இடமளிக்கவில்லை.

தெற்கில் இருந்து புத்தர்சிலை எடுத்து வருவதாகவும், அன்றைய தினம் விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் நான் எவ்வாறான விசேட அனுமதியும் எதற்கும் கொடுக்கவில்லை.

அரசியல் நோக்கத்திற்காக குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என கோருகிறோன்.

அதேவேளை தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள என அரசாங்கத்தால், புதிய குழு அமைத்துள்ளார்கள், அந்த குழுவிடம் எமது விகாரைக்கான ஆவணங்களை கையளித்துள்ளோம். அதே போன்று காணியை உரிமை கோரும் நபர்களும் தமது காணி தான் என்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளோம்.

இந்த விவாகரத்தில் இதொரு சட்டவிரோத செயல் என தீர்பளிக்கப்பட்டால் இதனையும் ஏற்க நான் தயார்.

விகாரை காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரை யாரும் என்னுடன் பேசவில்லை. அரசாங்கத்தின் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மதிப்பளித்து விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என உறுதியளிக்கிறேன் என்றார்.