2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

பாதிக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனரமைக்க வியட்நாம் ஆசிரமத்திடமிருந்து நன்கொடை

உள்ளூர்December 26, 2025 · 8 months முன்3
பாதிக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனரமைக்க வியட்நாம் ஆசிரமத்திடமிருந்து நன்கொடை

புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி டாம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (26) முற்பகல் அமைச்சில் நடைபெற்றது.

‘திட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பௌத்த விகாரைகளை புனரமைப்பதற்காக, வியட்நாமின் வுசரஉ டுயஅ பௌத்த ஆசிரமத்தினால் வழங்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் நிதி இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், வுசரஉ டுயஅ பௌத்த ஆசிரமத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான சமய மற்றும் கலாசார உறவுகளை வளர்ப்பதற்காக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் வுசரஉ டுயஅ பௌத்த ஆசிரமத்தின் பிரதம ஆலோசகர் வணக்கத்திற்குரிய வுhiஉh Phயி ஞரயபெ உள்ளிட்ட தேரர்கள், தூதுவரின் செயலாளர் ரம்யா நிலங்கனி மற்றும் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி கல்ப பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.