2026 October 25, Sunday 🌧️ கொழும்பு 26° 🌧️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

உள்ளூர்December 26, 2025 · 10 months முன்6
யாழில்.ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்றையதினம் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில், சுட்டுக் கொல்லப்பட்டார்.