2026 October 25, Sunday ⛈️ கொழும்பு 26° ⛈️ யாழ்ப்பாணம் 26° 🌧️ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கர்நாடகா பேருந்து தீ விபத்தில் பலர் பலி

உலகம்December 25, 2025 · 10 months முன்2
கர்நாடகா பேருந்து தீ விபத்தில் பலர் பலி

கர்நாடகாவில் இன்று (25) அதிகாலை 2.00 மணியளவில் பயங்கரமான பேருந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கோகர்ணா நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-ல் எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதி தீப்பிடித்து எரிந்தது.

லொறி மோதிய வேகத்தில் பேருந்தின் எரிபொருள் தாங்கி வெடித்துச் சிதறியதால், பேருந்து உடனடியாகத் தீப்பற்றியது. பேருந்து முழுவதும் தீ பரவியதால், பயணிகளால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

இந்த விபத்தில் சுமார் 17 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்து சித்ரதுர்கா மற்றும் துமகூரு மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தினர். சித்ரதுர்கா பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது.

கர்நாடகாவில் கிறிஸ்துமஸ் நாளில் ஏற்பட்ட இந்த விபத்து மாநிலத்தை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.